வெளிப்படுத்துதல்கள் Jeffersonville, Indiana, USA 62-0313 1மரித்துப்போன நம்முடைய சகோதரியைக் குறித்துள்ள இந்த சாட்சிகளையும், அவர்களைப் பாராட்டி பேசின பேச்சுகளோடே, நானும் கூட இந்த வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன். பெல் அவர்களின் குடும்பத்தில் முதலாவது எனக்கு அறிமுகமானவர் யாரென்றால் அவர்களுடைய கணவராகிய ஜிம்மி அவர்கள் தான், அவர் கடந்து சென்ற என்னுடைய தகப்பனாருடைய அவ்வளவு ஒரு ஆத்ம நண்பராவார். அதன்பிறகு வந்த வருடங்களில், நான் ஒரு ஊழியக்காரனானேன், அப்போது சகோதரி பெல்லுடன் அறிமுகம் கிடைத்தது, அவர்கள் ஒரு உண்மையான தெய்வபக்தியுள்ள கிறிஸ்தவர்களாய் இருப்பதை அறிந்தேன். எங்கிலுமுள்ள நாம் எல்லாருமே அவர்களை இழந்து விட்டிருக்கிறோம். இவ்விதமாக யாரோ ஒருவரைக் குறித்து வார்த்தைகளைக் கூறுவதென்பது மிக எளிதானது தான், ஏனென்றால் நீங்கள் எதையும் திரும்பப் பெற வேண்டியதில்லை. ஒரு கிறிஸ்தவளாயிருப்பதற்கு என்ன தேவையாயிருந்ததோ அவ்வண்ணமாக அவர்கள் இருந்தார்கள். சிறிது நேரத்திற்கு முன்பு, அந்த சகோதரி பாடுவதை நான் கேட்ட போது, நாம் இங்கே சுற்றிலும் அவர்களை அறிந்த நேரத்தில், அவர்கள் பாடிக்கொண்டிருப்பதை மிக அதிகமாக எனக்கு அது நினைவுபடுத்தியது. அவர்கள் பாடுவதை விரும்பினார்கள். இதைச் செய்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அது உண்மையாகவே சகோதரி பெல் அவர்கள் எவ்வாறு இருந்தார்கள் என்பதை உணரச்செய்தது. அவர்கள் அந்தவிதமாகத்தான் தங்களை வெளிப்படுத்த விரும்பினார்கள். என்னுடைய ஜெபம், என்னுடைய உத்தமமான ஜெபம் என்னவெனில், நாம் அனைவரும் பாதையின் கடைசியில் வரும்போது, அவர்கள் கொண்டிருந்ததைப் போன்ற ஒரு சாட்சியை நாமும் கொண்டிருக்க வேண்டும் என்பதே. 2இங்கே வேதவாக்கியத்தில் சிலவற்றை, அதில் - ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். சகோதரி பெல் அவர்கள் தேவனுடைய வார்த்தையை அவ்வளவு அதிகமாக நேசித்தவர்கள் என்பதை நான் உணருகிறேன், எப்படியென்றால், அவருடைய வார்த்தை நித்தியமாயுள்ளது. நான் யோபு 14-ம் அதிகாரத்தில் ஒரு பாகத்தை நான் வாசிக்க வேண்டும் என்று நினைத்தேன். (யோபு 14:1-16) ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான். ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்து வைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ? அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை. அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனை விட்டு விலக்கும். ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும். மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான்; மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே? தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறதுபோல, மனுஷன் படுத்துக்கிடக்கிறான், வானங்கள் ஒழிந்து போகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை. நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக. இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். 3நித்திய வார்த்தையிலிருந்து வாசித்தோம், கொஞ்ச நேரம் வெறுமனே ஒரு வார்த்தையின் பேரில் நாம் சிந்திக்கலாம் என்று விரும்புகிறேன், அந்த வார்த்தை என்னவெனில் வெளிப்படையாக காண்பித்தல் என்பதாகும். ஜீவியத்தில் வெளிப்படையாகக் காண்பிக்கிற அநேக காரியங்கள் உண்டு. ஒருவர் தம்முடைய ஜீவியத்தில் ஏதோவொரு சமயத்தில் நின்று, அவர் எங்கிருந்து வந்தார் என்றும், இங்கே அவருடைய நோக்கம் என்னவென்றும், இதற்குப்பிறகு, இங்கிருந்து அவர் எங்கே செல்லப்போகிறார் என்றும் சிந்தனை செய்யாதவாறு பூமியில் ஜீவிக்கிற ஒரு நபரும் இல்லை. ஒவ்வொருவரும் திரைக்கப்பால் நோக்கிப்பார்க்க விரும்புகிறார்கள், அவ்வாறு விரும்புவார்கள். வேதாகமத்தில் மிகப்பழமையான புத்தகமாகிய யோபு புத்தகத்திலிருந்து இங்கே வாசித்தோம், இந்த கோத்திரப்பிதாவாகிய யோபுவும் இந்த அதே காரியத்தை கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் தேவனிடத்தில் தன்னுடைய உணர்ச்சி வேகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான், மரணத்திற்குப்பிறகு அவர் ஒரு-ஒரு ஜீவனாயிருந்ததை வெளிப்படையாகக் காண்பித்துக் கொண்டிருந்தான். நாம் இவ்விதமான ஏதோவொன்றோடு நேருக்கு நேராக நிற்கும்போது, நாம் இவ்வளவு தான் என்று சிலசமயங்களில் அதை உணருகிறோம். ஆனால் இது தான் எல்லாமல்ல. இது மாற்றமாயுள்ளது. இது... ஒருபடி அதிகமாக. இது ஒரு ஜீவியத்திலிருந்து வேறொன்றுக்குள் கடந்து செல்கிறது. தீர்க்கதரிசியாகிய யோபு இந்தக் காரியங்களை சிந்திக்கையில், அவன் அதைத் தாவரவியலிலும், தாவரங்களின் வாழ்க்கை முறையிலும், மரத்தின் வாழ்க்கை முறையிலும் கண்டுபிடித்தான். எனவே அவன் அதை - தேவன் எவ்வாறு தம்முடைய சிருஷ்டிப்பில் இருக்க வேண்டும் என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தான்; அவர் சிருஷ்டிப்பை சிருஷ்டித்திருந்தால், அவர் சிருஷ்டிப்பில் ஜீவித்தாக வேண்டும், ஏனென்றால் அவர் அதை ஒரு நோக்கத்திற்காகவே உண்டாக்கினார் - அவர் தாமே அந்த சிருஷ்டியில் ஜீவிக்கும்படியாக உண்டாக்கினார், ஒரு மனிதன் வீடொன்றைக் கட்டுவது போல அதைச் செய்தார். தேவனுடைய சிருஷ்டிப்பு அனைத்திலுமுள்ள இந்தச் சின்னஞ்சிறிய உயிரினங்கள் அவைகளின் சிருஷ்டிகரை சார்ந்திருக்கின்றன. அவன் அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான், ஒரு புயல் வந்து ஒரு பெரிய மரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருமானால் (ring down), அப்பொழுதும் அந்த மரத்திற்கு முடிவில்லாதிருந்தது. அது மீண்டும் ஜீவித்தது. அந்த மரமானது செத்ததானால், அது ஜீவித்தது. நாம் அநேக நேரங்களில் கலக்கமடைந்து இருக்கும்போது, நாம் நம்மைச் சுற்றிலும் சற்றே நோக்கிப் பார்ப்போமானால், உங்களால் தேவனை எல்லாவிடங்களிலும் காண முடியும். இப்பொழுது நாம் அவரை எடுத்துக்கொள்வோம், அந்த மரம் இங்கே வைக்கப்படுமானால், அந்த மரத்தில் உள்ளதைப்போல. 4நாம் இங்கே ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இருப்பது போலவும், நம்முடைய சகோதரி இங்கே ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இருந்தது போலவும், எல்லாமே ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே இங்குள்ளன. நாம் அனைவருமே தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே இங்கிருக்கிறோம், அந்த நோக்கம் என்னவென்பதை நம்மால் கண்டுகொள்ளக் கூடுமானால், அப்போது அதை நன்றாகச் செய்வோம். அங்கே, நிச்சயமாக, தாவரத்தின் உயிர்த்தெழுதலைக் குறித்து தேவன் போதுமான அக்கறை கொள்வாரானால், மனிதனுடைய ஜீவனின் உயிர்த்தெழுதலைக் குறித்தும் அவர் போதுமான அக்கறை கொண்டவராயிருக்கிறார். ஆகையால் கோத்திரப்பிதாவாகிய யோபு அந்த மரமானது செத்தால், அது மீண்டும் ஜீவித்ததைக் கவனித்தான். கோடைகாலமும் குளிர்காலமும் அவைகளின் தன்மைகளை எவ்வாறு மாற்றுகிறது என்றும், அங்கே ஒவ்வொரு நாளும் ஒரு சாட்சியை விட்டுச் செல்கின்றன என்றும் கவனித்தான். அந்த மரமானது கோடை காலத்தில் உயிரோடிருந்து, குளிர்காலத்தில் மரித்துப்போவதாக காணப்படுவதையும், மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இலைகளையும் அவன் கவனித்தான். 5இப்பொழுது, அங்கே ஒரு ஜீவவிருட்சம் இருக்கிறது என்று நாம் வேதவாக்கியத்தில் கற்பிக்கப்பட்டுள்ளோம். அது ஏதேன் தோட்டத்தில் இருந்தது. இந்த ஜீவவிருட்சத்தில் தான் கிறிஸ்தவர்கள் இந்த மரத்தின் இலைகளாக தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது குளிர்காலத்தில், அந்த இலைகள் அருமையாக இருக்கும்போது, ஏன், அவைகள்... அல்லது, சரியாகச் சொன்னால், கோடைகாலத்தில் இலைகள் அருமையாகவும், பசுமையாகவும் இருக்கும் போது, சிறிது கழிந்து உறைபனி வந்து, அந்த இலைகள் வித்தியாசமான வண்ணங்களாக மாறி, அவைகள் மரத்திலிருந்து கீழே விழுந்து விடும். அந்த ஜீவனானது மரத்தின் வேருக்குள் மீண்டும் போய்விடுகிறது. நாம் சற்று அதைக் கவனித்தால், அது ஒரு புரியாத புதிராக உள்ளது. 6இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு நாத்தீகனாக இருப்பதாக உரிமைகோரின அவிசுவாசியான ஒரு மனிதரை நான் நேருக்கு நேர் சந்தித்து, அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு சொந்தமான ஒரு ஆப்பிள் மரத்தின் பக்கத்தில் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அந்த மரத்திற்கு எவ்வளவு வயதாகிறது என்று அவரிடம் நான் கேட்டேன், அநேக வருடங்கள் ஆனதாகவும், அது ஒவ்வொரு வருடமும் எத்தனை மரக்கால் ஆப்பிள் பழங்களை உற்பத்தி செய்தது என்றும் அவர் என்னிடம் கூறினார். அது ஆகஸ்டு மாதத்தின் ஆரம்பத்திலுள்ள நேரமாக இருந்தது, ஆப்பிள் பழங்கள் ஏற்கனவே விழுந்து விட்டன என்றும், இலைகள் பழுப்பு நிறத்தில் மாறிக் கொண்டிருந்தன என்பதையும் கவனித்து அறிந்து கொண்டேன். நான் அவரிடம், 'நான் உம்மிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். எந்த உறைபனியும் அந்த மரத்தினுடைய இலைகளைத் தாக்குவதற்கு முன்பே, அந்த இலைகள் ஏன் பழுப்பாக மாறி மரத்திலிருந்து விழுந்து விடுகின்றன' என்று கேட்டேன். 'நல்லது,' அவர், 'குளிர்காலம் வந்து கொண்டிருக்கிறது. ஜீவனானது அந்த இலையை விட்டுப் போய்விட்டிருக்கிறது என்ற காரணத்தால் தான் அவைகள் பழுப்பு நிறமாக மாறுகின்றன' என்றார். நான், 'அந்த ஜீவன் எங்கு சென்றது?' என்று கேட்டேன். அவர் என்னிடம், 'மரத்தின் வேருக்குள் திரும்பிப் போய் விட்டது, அது எங்கிருந்து வந்ததோ அந்த இடத்திற்கு அது திரும்பிச் சென்று விட்டது' என்றார். மேலும் நான், 'அதுதான் அந்த இலைக்கு முடிவா?' என்று கேட்டேன். அவர், 'இல்லை. அந்த ஜீவனானது மீண்டும் ஒரு புதிய இலையோடு அடுத்த வசந்த காலத்தில் திரும்பி வரும்' என்றார். அவர் அதை அதற்கு முன்பு ஒருபோதும் கவனித்திருக்கவில்லை. நான், 'அப்படியானால், ஐயா, எந்த அறிவுத்திறன் வேறொரு பருவகாலம் வருமட்டுமாக குளிர்காலம் வருவதற்கு முன்பே அந்த மரத்தை விட்டு இலையை உதிரச்செய்து, அதனுடைய ஜீவனை பாதுகாப்பாக கீழே நிலத்திற்குள் திரும்பவும் அனுப்புகிறது என்று என்னிடம் கூறுங்கள் என்று நான் உம்மிடம் கேட்கிறேன். நீங்கள் ஒரு பக்கெட்டில் தண்ணீரை எடுத்து, அதை ஒரு கம்பத்தில் வைக்கலாம், (ஆனால்) அது ஒருபோதும் பருவகாலத்தில் மாறாது. ஆகையால் ஜீவனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிற ஒரு தேவன் அங்கே இருக்கிறார் என்பதை அது காண்பிக்கிறது' என்றேன். 7கிறிஸ்தவர்கள் என்றும், தேவனுடைய ஆவியினால் பிறந்தவர்கள் என்றும் உரிமைகோருகிற, நாம் அவ்வாறு தான் இருந்து வருகிறோம், நாம் தேவனுடைய கிருபையினால், மரண விருட்சத்திலிருந்து ஒரு ஜீவ விருட்சத்திற்கு இடம் மாறினோம். அந்த இலைகளில் ஒன்று உதிரும்போது, அந்த சாட்சியை நான் கேள்விப்பட்டது போல... இந்த அற்புதமான சபையாகிய கில்ட் எட்ஜ் பாப்டிஸ்ட் சபை, அங்கே என்னுடைய விலையேறப்பெற்ற நண்பர்களில் அநேகர் அங்கத்தினர்களாய் இருக்கிறார்கள், அங்கே அதின் இலைகளில் ஒன்று உதிர்ந்திருக்கிறது. அந்த ஜீவனானது ஏதோவொரு நோக்கத்திற்காக அதைக்கொடுத்த தேவனிடமே திரும்பிப்போயிருக்கிறது என்பதை அறிகிறோம், அது பொதுவான உயிர்த்தெழுதலில் மாத்திரமே மீண்டும் வரும்; அது ஆயிரவருட அரசாட்சியில் மறுபடியும் ஒருபோதும் உதிர்ந்து விழாது. அந்த மகத்தான நேரம் வந்து கொண்டிருக்கிறது. யோபு இந்தக் காரியங்களைக் கவனித்திருந்தான். அதன்பிறகு அவன் சூரியனின் ஜீவியத்தைக் கவனித்தான். 8நீங்கள் ஒரு காலை நேரத்தில் கவனிப்பீர்களானால், சூரியனானது மேலே வருகிறது, (அப்போது) அது ஒரு குழந்தையாக இருக்கிறது. அதனுடைய கதிர்கள் பலவீனமாயுள்ளன. அதன்பிறகு அது ஏறக்குறைய ஒன்பது அல்லது பத்து மணிக்கு தன்னுடைய டீன் ஏஜ்-க்குள் வருகிறது. அதன்பிறகு மதிய நேரத்தில், நடுப்பகலில், அது அதனுடைய பலத்திற்குள் வருகிறது. அதன்பிறகு அது மரிக்கத் தொடங்கி, இறுதியாக அது மீண்டும் மேற்கில் மறைந்து, அது அந்த நாளில் மரித்து விடுகிறது. அது தான் சூரியனின் முடிவு என்று நாம் சவால் விட முடியுமா? இல்லை. அடுத்த நாள் காலையில், நமக்கு ஒரு புதிய நாளை தரும்படிக்கு, அது மீண்டும் திரும்பவும் மேலே வருகிறது. இப்பொழுது, இது என்ன? இது தேவன் வெளிப்படுத்திக் காண்பிப்பதாகும். வெளிப்படுத்திக் காண்பித்தல் (expression) என்ற வார்த்தைக்கு 'ஒரு உணர்வை அறியும்படி செய்வது' என்று அர்த்தமாகும். அது தேவனுடைய வெளிப்படுத்துதல், தேவன் நமக்கு வெளிப்படுத்திக் காண்பிப்பதாகும், மரணம் நம்மை நித்தியமாகப் பிரிப்பதில்லை என்ற அவருடைய உணர்வை நாம் அறியும்படி செய்வதாகும். நாம் மீண்டும் உயிர்த்தெழுந்து, மறுபடியும் திரும்ப வருவோம். இந்த மலர்களைப்போல, அவைகள், வருடத்தின் இலையுதிர்காலத்தில், அவைகளை உறைபனி தாக்கும்போது, அச்சிறு விதைகள் அவைகளை விட்டு கீழே விழுந்து, அந்த விதையானது பூமியில் மரிக்கிற ஒவ்வொரு தடவையும், அந்த விதையானது கீழே பூமிக்குள் போகிறது. அது ஒருக்கால் அவ்வளவு வினோதமாகத் தோன்றலாம், ஆனாலும் அது சத்தியமாக உள்ளது, தேவன் எதையும் கவனிக்காமல் விட்டு விடாதிருக்கிற மிகவும் முடிவற்றவராயிருக்கிறார். அவர் தம்முடைய மலருக்காக ஒரு அடக்க ஊர்வலத்தை நடத்துகிறார். உறைபனி அவைகளைத் தாக்கிய பிறகு, மழை வந்து பொழிகிறது, மழைத்துளிகளின் மகத்தான பெரிய கண்ணீர்கள் வானத்திலிருந்து பொழிகிறது, அந்த மலரின் வித்தானது அடக்கம் பண்ணப்படுகிறது, அதன்மேல் தட்டிக்கொடுக்கிறது, ஒருவேளை அது பூமிக்கு அடியில் ஒரு அங்குலம் அல்லது இரண்டு அங்குலங்கள் போகிறது. அதன்பிறகு குளிர்கால குளிர்ந்த காற்று வீசத் தொடங்குகிறது, மலரின் அந்த சிறு இதழ்கள் போய்விடுகின்றன, காம்புப்பகுதியும் போய்விடுகிறது, பிறகு அதனுடைய கிழங்குப்பகுதி பனியால் மூடப்பட்டு உலர்ந்து விடுகிறது. அதன்பிறகு, அந்த சிறு விதையானது பனியால் மூடப்பட்டு, பசை போன்றவை அதை விட்டுப் போய்விடுகின்றன. பிறகு, ஏன், வசந்த காலத்தில், அதை விட்டுப் போய்விட்ட எதையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. 9ஆனால் அதுதான் அந்த மலரின் முடிவா? ஒருபோதும் இல்லை. அது ஒரு நோக்கத்துக்காக இங்கே வைக்கப்பட்டிருந்தது. அது தன்னுடைய நோக்கத்தை நன்றாக நிறைவேற்றின போது, அந்தப் பூவின் மூலமாக, தேவன் அதை நமக்கு அறியப்பண்ணுகிறார், அது அவர் நமக்கு வெளிப்படுத்திக் காண்பிப்பதாகும். சூரியனானது பூமிக்கு சற்று அருகில் வந்து, சூடான கதிரைப் பாய்ச்சுவது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, அந்த ஜீவனை உங்களால் எங்குமே மறைக்க முடியாது. ஒரு பாறையைக் கொண்டு உங்களால் அதை மறைக்க முடியாது. நீங்கள் உங்களுடைய கான்கிரீட் பலகையை குளிர்காலத்தில் வைத்திருக்கும் போது, அந்த இடத்திலிருக்கிற புல் வசந்த காலத்தில் அடர்த்தியாக கான்கிரீட்டின் ஓரத்தைச் சுற்றிலும் இருப்பதை நீங்கள் எப்பொழுதாவது கவனித்திருக்கிறீர்களா? அது ஏன் அவ்வாறு உள்ளது? அந்தக் கல்லின் அடியில் அந்த ஜீவன் உள்ளது. சூரியனானது பூமியில் பிரகாசிக்கத் தொடங்கும் போது, உங்களால் ஜீவனைப் பிடித்து வைத்திருக்க முடியாது. அது அந்தக் கான்கிரீட் பலகையின் அடியிலிருந்து வெளிப்புறமாக அதனுடைய பாதையைக் கண்டுபிடித்து, அது தேவனைத் துதிக்கும்படியாக அதனுடைய சிறிய தலையை மேலே உயர்த்தும், ஏனென்றால் சூரியனானது உயிர்த்தெழுதலாக இருக்கிறது. சூ—ரி—ய—னா-னது (s-u-n) தாவர ஜீவன்கள் யாவற்றினுடைய உயிர்த்தெழுதலாயிருக்கிறது. சூரியன் பிரகாசிக்கும் காலம் வரை உங்களால் அதை மறைத்து வைத்திருக்க முடியாது. 10அநேக தடவைகள் கு-மா-ர-ன் (S-o-n) தூரமாக இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனார் அவர் பிரகாசிக்கத் தொடங்கும்போது, 'தம்முடைய செட்டைகளில் ஆரோக்கியத்தோடு நீதியின் சூரியன் உதிப்பார்.' ஒவ்வொரு ஜீவனும், அது எங்கே அடக்கம் பண்ணப்பட்டிருந்தாலும், அது தண்ணீர்களிலோ அல்லது மணல்களிலோ, கற்பாறைகளிலோ எவ்வளவு தூரம் ஆழத்தில் இருந்தாலும் அது காரியமில்லை, அது தேவனுடைய மகிமைக்காக உயிர்த்தெழும்பும். ஏனென்றால், தேவன் நமக்கு வெளிப்படுத்திக் காண்பித்து, தாம் செய்து கொண்டிருப்பதை நமக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய நோக்கம் என்னவெனில், பூக்களினூடாகவும், சூரியனினூடாகவும், மரங்களினூடாகவும், எல்லா ஜீவன்களினூடாகவும் அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார் என்று நமக்குக் காண்பிப்பதாகும். அது தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுகிற போது, அவர் தம்முடைய ஜீவனை உயிர்த்தெழச் செய்கிறார். 11பூவானது அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றுமானால், தேவன் பூவுக்காக ஒரு உயிர்த்தெழுதலைக் கொண்டிருப்பாரானால், ஜீவியத்தில் தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றின நம்முடைய சகோதரியை தேவன் எவ்வளவு அதிகமாக உயிர்த்தெழச் செய்வார்? தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறவர்களுக்கு தேவன் ஒரு உயிர்த்தெழுதலைக் கொண்டிருக்கிறார். நாம் நம்மைக் குறித்துள்ள நோக்கத்தை கண்டுபிடித்து, பிறகு அவைகளை நிறைவேற்றலாம். இந்தச் சிறு பூக்களைக் குறித்து நீங்கள் கேட்கலாம். அவைகள் இந்தப் பிற்பகல் வேளையில் ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இங்கே உள்ளன. அதற்காகத்தான் இந்தப் பூக்கள் உள்ளன, ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே தேவன் அவைகளை வைத்திருந்தார். அது தொடர்ந்து தொடர்ந்து போக முடியும். நீங்கள் கவனிப்பீர்களானால், இந்தப் பூக்கள் எல்லாம் ஒரே நிறமான பூக்களாக இருப்பதில்லை. அவை நிறத்தில் வேறுபடுகின்றன, தேவன் வெவ்வேறு வகைகளின் தேவனாயிருக்கிறார் என்பதை அது காட்டுகிறது. அவர் வித்தியாசமான நிறங்களின் மேல் பிரியப்படுகிறார். அவைகளை ஒன்றாக சேர்த்து தாம் விரும்புகிற மலர் செண்டாக ஆக்குகிறார். தேவன் வெவ்வேறு வகைகளின் தேவனாயிருக்கிறார். அவர் தம்முடைய வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டிருக்கிறார். அவர் தம்முடைய சிவப்பு நிற பூக்களையும் கொண்டிருக்கிறார். அவர் தம்முடைய எல்லா நிறமான பூக்களையும் ஒன்றாக வைத்து தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறார். அவரிடம் பெரிய மலைகள் உள்ளன, சிறு குன்றுகளும், சமவெளிகளும் (plain) அவருக்கு உண்டு. பாலைவனங்களையும் அவர் வைத்திருக்கிறார். கடலையும் அவர் உடையவராயிருக்கிறார். அவர் கருவாலி மரத்தையும், பனை மரத்தையும் உடையவராயிருக்கிறார். எல்லாமே அதன் இடத்தில் சமமாக சேர்க்கப்பட்டு, அங்கே தேவன், தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிற நேரத்தில், தமது சிருஷ்டிகளில் ஜீவிக்கிறவராக, இயற்கை எல்லாவற்றினுடைய தேவனாக ஜீவித்து, தமது ஜீவன்களோடு மகிழ்ந்திருக்க முடிகிறது. அவர் அதை உயிர்த்தெழும்படி செய்ய போதுமான அளவு சிந்தனை செய்து, மீண்டும் வருங்காலத்தில் அதனுடைய கடமையைச் செய்ய அதற்காக தப்பித்துக்கொள்ளும்படியான ஒரு வழியை உண்டாக்குவாரானால், நாம் யாராயிருந்தாலும், எந்த இனத்தை சேர்ந்தவர்களாயிருந்தாலும், எந்த நிறத்தவராயிருந்தாலும், எந்தக் கோட்பாட்டைக் கொண்டிருந்தாலும், அல்லது எதுவாயிருந்தாலும், தேவனுடைய பிரசன்னத்தின் ஐக்கியத்திலும், அவருடைய ஆசீர்வாதத்திலும், ஒன்றாக வாசம்பண்ணக்கூடிய ஜனங்களுக்கு அவர் எவ்வளவு அதிகமாக தப்பித்துக்கொள்ளும்படியான வழியை உண்டாக்கியிருக்கிறார். அந்தப் பூவுக்கு ஒரு உயிர்த்தெழுதல் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, அங்கே ஏதோவொரு நாளில் ஒரு உயிர்த்தெழுதல் இருக்கும். நாமெல்லாரும் அதைக் காண்கிறோம். நாம் அனைவரும் அதை விசுவாசிக்கிறோம். இந்தக் காரியங்கள் எல்லாம் வெளிப்படுத்திக் காண்பிக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவைகள் சாட்சிபகர்ந்து, நம்மிடம் கூறி, நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிற ஒரு உணர்வை அறியச்செய்கின்றன. 12இந்த மலர்களை அனுப்பியிருக்கிற ஜனங்களும், இந்த மலர்களை அனுப்பியிருக்கிற நம்முடைய சகோதரியின் நண்பர்களும் கூட, ஒரு நண்பருடைய, அல்லது ஒரு சகோதரியுடைய, அல்லது-அல்லது அன்பார்ந்த ஒருவருடைய அனுதாப உணர்ச்சியை இந்தக் குடும்பத்தினருக்கு வெளிப்படையாகக் காண்பித்து, அவர்கள் அறியும்படி செய்கின்றனர். அவர்கள் வெளிப்படுத்திக் காண்பிக்க முயற்சிக்கிறார்கள். அவைகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, அவைகளை அறியச்செய்து, ஏதோவொன்றை அறிவிக்கிறதாயிருக்கின்றன. நாம் மணிக்கணக்காக பேசக்கூடிய இந்தக் காரியங்கள் எல்லாம் மனித இனத்திற்கு தேவனுடைய உணர்ச்சி வெளிப்பாடாயுள்ளது, இந்த யாவுமே தங்களுடைய பாகத்தை கொண்டிருக்கின்றன, அவைகள் அதை நன்கு செய்கின்றன. ஒவ்வொரு மலரும், ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு சூரிய உதயமும், ஒவ்வொரு சூரிய அஸ்தமனமும், ஒவ்வொன்றுமே அதனுடைய பாகத்தை நன்கு செய்கின்றன. ஆனால் தேவனுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இந்த எல்லா காரியங்களும், அவர் ஏதோவொரு நாளில் செய்யப்போகிற ஒரு மகத்தான உணர்ச்சி வெளிப்பாடாகவும், ஒரு நித்திய உணர்ச்சி வெளிப்பாடாகவும் இருப்பதை நாம் அறியும்படி செய்வதும், நமக்கு ஒரு திருஷ்டாந்தத்தைக் கொடுப்பதுமாக இருக்கிறது. அதன்பிறகு அவர் தம்முடைய வெளிப்படுத்தப்பட்ட சாயலை அவருடைய குமாரனுடைய உருவில் நம்மிடம் அனுப்பினார். தேவன் நம்மைக் குறித்து என்ன எண்ணினார் என்பதை மனித இனத்திற்கு அறிவிக்கும்பொருட்டு, தாமே தம்முடைய வெளிப்படுத்தப்பட்ட சாயலில் தம்முடைய குமாரனை அனுப்பினார். அவர் தம்முடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டு மனிதரானார். அவர் நம்மில் ஒருவரானார். நித்திய பிதாவாகிய தேவனிடமிருந்து, மகத்தான சிருஷ்டிகரிடமிருந்து - அங்கே ஒரு உலகமானது இருந்ததற்கு முன்னமே, விண்வெளி பரப்பு, காலம் யாவற்றையும் நிரப்பினவராயிருந்தார். அங்கே ஒரு - ஒரு அளக்கும் கருவியோ, அல்லது ஒளியை அளக்கும் ஒரு கருவியோ, அங்கே ஒரு அணுவோ அல்லது ஒரு மூலக்கூறோ கூட இல்லாதிருந்தது, அப்பொழுதும் அவர் தேவனாயிருந்தார். மேலும் அவர் எப்போதுமே தேவனாயிருப்பார். ஆனால் அந்த மகத்தான ஒருவர்... நீங்கள் இரவிலே மேலே நோக்கிப்பார்த்து, சூரிய குடும்பத்திலுள்ள நட்சத்திரங்களைப் பார்க்கக் கூடுமானால். கொஞ்ச வருடங்களுக்கு முன்பு, இந்தப் பெரிய தொலைநோக்கி வழியாக நோக்கிப் பார்க்கும்படியான சிலாக்கியம் எனக்கு உண்டாயிருந்தது, அங்கே 120 மில்லியன் ஒளி ஆண்டுகள் (தூரத்திலுள்ள) விண்வெளியையும், ஒளியை அளக்கும் கருவிகளையும் (light meters) உங்களால் காண முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதற்கும் மேலாக அவர் ஆளுகை செய்கிற சந்திரன்களும், நட்சத்திரங்களும், உலகங்களும் இன்னும் இருக்கின்றன. 13அப்படியானால், அவர் மிகவும் மகத்தானவராயிருக்கிறார் என்பதைக் குறித்த ஒரு வெளிப்படுத்துதலை நாம் அறியும்படி செய்வதற்கு, கவனத்தில் கொள்வதற்கு அவர் மிகவும் போதுமானவராயிருந்தார். ஆயினும், அவர் என்னவாயிருந்தார் என்பதை வெளிப்படுத்துவதற்காக, அவர் மனுஷ ரூபத்தில் இறங்கி வந்தார். அவர் துக்கத்தைக் கொண்ட ஒரு மனிதராக ஆனார், வருத்தத்தை அறிந்தவராகவும் ஆனார். அவர் மனித வாழ்க்கையை வாழ்ந்தார். அவருடைய தலைசாய்க்கவே அவருக்கு இடமில்லாதிருந்தது. அது என்னவாக இருந்தது என்பதையும், தேவன் என்னவாயிருந்தார் என்பதையும் வெளிக்காண்பித்துக் கொண்டிருந்தார். நாம் வியாதியாயிருந்த போது, அவர் நம்முடைய வியாதியை சுகப்படுத்தினார். அவர் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சாயலாயிருந்தார் என்பதை காண்பிக்கும்படியாக அவர் மரித்தவர்களை உயிரோடெழுப்பினார். அவர் நம்மெல்லாருக்காகவும் ஒரு திட்டத்தை தெளிவுபடுத்திக் காட்டினார், அங்கே நாமும் கூட இந்தச் சிறிய வெளிப்படுத்துதலைக் கவனித்து, தேவனைக் காண முடியும். அதன்பிறகு நாம் மேலே நோக்கிப்பார்த்து, தேவனுடைய மகத்தான வெளிப்படுத்துதலைக் கண்டு, அந்த உறுதியைக் கொண்டிருக்க முடிந்தது, அப்படியானால், இந்த மணிநேரம் வரும்போது, இது அதனுடைய முடிவல்ல. நம்முடைய சகோதரி பாடிக்கொண்டிருக்கும்போது, சிறிது நேரத்துக்கு முன்பு அவர்கள், 'இது என்னுடைய சகோதரி. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை நான் அறிந்திராவிட்டால், நான் இந்தவிதமாக இதைப் பாடியிருக்க முடியாது' என்று கூறின அந்த வெளிப்படுத்துதலை நான் விரும்புகிறேன். பாருங்கள்? 14நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ள ஒரு வழி உண்டு, ஏனென்றால் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சாயல் இந்தத் திட்டத்தை முறைப்படுத்தியது. மேலும், இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுகிற எவரும் நித்திய ஜீவனைக் கொண்டிருப்பார்கள் என்று அவர் கூறினார். 'என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்' என்று யோவான் 5:24 கூறுகிறது. அவை எல்லாவற்றிலும் மிகப்பெரிய வெளிப்பாடு (expression) நமக்காக ஒரு வழியை உண்டாக்கின இயேசு கிறஸ்துவாகத்தான் இருந்தது. அங்கே நீதியான ஒருவர் வருவார் என்று அவருடைய வருகைக்கு முன்பாகவே சாட்சி பகர்ந்த இந்தப் பூக்களும், தாவர ஜீவன்களும், அதைப் போன்ற மற்றவைகளும், சூரியனும், சூரிய குடும்பமும் வெளிப்படுத்துகிற வெளிப்படுத்தல்கள் எல்லாவற்றையும் அவர் நிறைவேற்றி நிரூபித்துக் காட்டினார், நாம் அதை உறுதியாக விசுவாசிக்கும்படி அது நமக்குச் செய்கிறது, ஏனென்றால் அவர் வெளிப்படுத்தப்பட்ட தேவ சாயலாக இருந்தார். அவர் வந்து, அவர் செய்த காரியங்களைச் செய்த போது, இந்த வெளிப்படுத்தல்கள் சரி என்பதை அவர் நிரூபித்தார். அவர் அவைகளை சரி என்று நிரூபித்துக் காட்டினார். ஏனென்றால், ஒரு பூ மறுபடியும் உயிரோடு எழுவதைப் போலவும், மரம் மறுபடியும் உயிரோடு எழுவதைப் போலவும், சூரியன் மறுபடியும் உதிப்பது போலவும் அவ்விதமே கிறிஸ்தவனும் மறுபடியும் உயிர்த்தெழுவான். அவன் உயிர்த்தெழுந்தே ஆக வேண்டும். ஏனென்றால், வெளிப்படுத்தப்பட்ட மனித சாயலில் இருக்கிற தேவன், அல்லது வெளிப்படுத்தப்பட்ட தேவ சாயலில் இருக்கிற ஒரு மனிதர், அவருடைய உயிர்த்தெழுதலின் மூலமாக அதை நிரூபித்துக் காட்டினார். 15அதன்பிறகு, அந்தத் தீர்க்கதரிசி இந்தக் காரியங்கள் அங்கே சம்பவிப்பதைக் கண்ட போது; யோபு, அவன் தாவர ஜீவன்கள் எல்லாவற்றையும், அதைப் போன்ற மற்ற காரியங்களையும் கண்ட போது. பிறகு, வேதாகமத்தோடு பழக்கப்பட்டுப் போன நமக்கு அது தெரியும். அவன் துயரத்தோடு இந்த சாம்பல் குவியலின் மேல் உட்கார்ந்திருந்தான், பிரச்சனைகள் அவனை தாக்கியிருந்தன. அவன் ஒரு... அவன் இரகசியமாக பாவம் செய்திருக்கிறான் என்று அவனது சபை அங்கத்தினர்கள் அவனிடம் கூறியிருந்தனர். அநேக நேரங்களில், 'உரிய காலத்திற்கு முன்பே ஒரு நபர் மரித்துப் போகிறார், அல்லது ஏதோவொன்று, அவர்கள் ஒருக்கால் ஏதோவொரு பாவம் செய்திருப்பார்கள். அவர்கள் தவறான ஏதோவொன்றைச் செய்திருப்பார்கள்' என்று கூறப்படுகிறது. இல்லை... ஒரு கிறிஸ்தவனுக்கு அப்படிப்பட்ட காரியமே கிடையாது. இந்த மகத்தான, கடைசி வெளிப்படுத்துதலை, தேவன் இயேசு கிறிஸ்து மூலமாக தமது திட்டத்தை அறியப்பண்ணுகிறார் என்பதை அவன் கண்ட போது, அவன் சத்தமாக கூக்குரலிட்டுக் கதறினான். மின்னல்கள் பளிச்சிட்டு, இடிகள் முழங்கின போது, அவன், 'என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாட்களில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். தோல் புழுக்கள் என்னுடைய சரீரத்தை அழித்துப் போட்டாலும், அதன்பிறகு இன்னுங்கூட என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன், அவரை நானே பார்ப்பேன்' என்றான். அவன் அநேக நூற்றுக்கணக்கான வருஷங்களுக்குப் பிறகுள்ள இறுதியான வெளிப்படுத்துலைக் கண்டான். ஆனால், அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்து, தேவனுடைய வருகையின் மகத்தான வெளிப்படுத்துதலை அந்தத் தரிசனத்தில் அவன் கண்டான். 16அவன் கீழே நோக்கிப் பார்த்து, விதைகளுடைய உயிர்த்தெழுதலை அவனால் காண முடிந்தது. மரங்களின் உயிர்த்தெழுதலை அவனால் காண முடிந்தது. சூரியனுடைய உயிர்த்தெழுதலையும் அவனால் காண முடிந்தது, சூரியனானது அதனுடைய நேரத்தைச் செலவழித்த பின்பு, அது மறுபடியும் உயிரோடு எழுந்து, ஒரு பகல் நேரத்தைச் செலவழித்து விட்டு, வேறொரு நாளுக்காக உயிரோடெழுகிறது. பூக்களுக்கும் ஒரு அடக்க ஆராதனை, அது மரித்து, வேறொரு அடக்க ஆராதனைக்காக உயிரோடு எழுகிறது. எல்லாமே அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. அதன்பிறகு, தூரத்திலே, அந்த நீதியான ஒருவரின் வருகையை அவன் கண்டு, 'என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்' என்று கூச்சலிட்டான். 'என்னுடைய மாம்சம் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்' என்றும், 'ஏனென்றால், அவருடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்; அவருடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்' என்றும் தாவீது கூறினான். அவன் அந்த நாளையும், தேவனுடைய அந்தப் பரிபூரண வெளிப்படுத்தலையும், அவர் என்னச் செய்யப் போவதாக இருந்தார் என்பதையும் கண்டான்; மரணம் தான் பாதையின் முடிவல்ல என்பதை மனிதன் அறிந்து கொள்ளும்படி செய்யவே. இது முடிவல்ல. இதுவே ஆரம்பம். இதுவே துக்கத்தின் முடிவு. தீர்மானம் செய்யும் நேரத்தின் முடிவு இதுவே. ஆனால் இது ஆனந்த சந்தோஷ நேரத்தின் துவக்கமும், பரிசு (பலன்) கிடைக்கும் நேரத்தின் ஆரம்பமுமாகும். இது எல்லாவற்றினுடைய முடிவல்ல. இது சாவுக்குரிய காரியம் முடிவு பெற்று, அழிவில்லாத காரியம் துவங்குவது தான். அவர்கள் தம்முடைய இளைப்பாறுதலுக்குப் போயிருக்கிறார்கள். தேவன் அவர்களுடைய ஆத்துமாவை இளைப்பாறப் பண்ணுகிறார். இப்பொழுது, அவன் இந்த மகத்தான வெளிப்படுத்தலுக்காகக் கதறினான், ஏனென்றால் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை அவன் கண்டான். 17இப்பொழுது நாம் இந்தத் தீர்மானத்திற்கு வருவோம். ஒரு அண்டை வீட்டுக்காரரரைக் குறித்தோ, ஒரு சகோதரியைக் குறித்தோ, ஒரு மனைவியைக் குறித்தோ, ஒரு தாயாரைக் குறித்தோ நமக்குள்ள அனுதாபத்தை வெளிப்படுத்தும்படியாக, அல்லது அதை அறியப்பண்ணும்படியாக நாம் இன்று இங்கே கூடி வந்திருக்கிறோம். அந்தக் காரணத்தினால் தான் நாம் இந்தப் பிற்பகலில் கூடி வந்திருக்கிறோம்; நம்முடைய அனுதாபத்தையும், நம்முடைய இழப்பையும் அறியச் செய்யும்படியாகவும், வெளிப்படுத்தும்படியாகவும் தான். ஆகையால் தான் நாம் இங்கே இருக்கிறோம், இதைச் செய்யும்படியாக. தகப்பனார் மனைவியினுடைய இழப்பை வெளிப்படுத்தும்படியாகவும், பிள்ளைகளும், தாயாரும், அண்டை வீட்டாரும், அல்லது சகோதரியும் அதற்காகவே இங்கே இருக்கிறார்கள். ஊழியக்காரர்களாகிய நாம். இந்தக் கட்டிடம் முழுவதும் அந்த அற்புதமானதும், மகிமையானதும், ஆறுதலானதுமாகிய வார்த்தைகளை எளிதாகப் புரியும் வகையில் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன், இந்தச் சகோதரி, அவர்களுக்கும், அவர்களுடைய சபையோருக்கும் எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தார்கள் என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பிற்பகல் வேளையில், ஊழியக்காரர்களாகிய நாம் வந்திருக்கிறோம். நிச்சயமாவே, நாமும் கூட நம்முடைய இருதயங்களில் துக்கமாக உணருகிறோம். ஆனால் நாமும் கூட இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் குறித்த அவருடைய சத்தியத்தையும், தேவனுடைய வெளிப்படுத்தலையும் அறியச் செய்யும்படியாக வந்திருக்கிறோம். அதைக் குறித்து தேவன் என்ன கூறுகிறார் என்பதை வெளிப்படுத்தவும், ஜனங்களுடைய இருதயங்களை ஆறுதல்படுத்தவுமே நாம் வந்திருக்கிறோம்; அது எவ்வளவு கடினமான அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்றும், இருப்பினும் அதை இந்தவிதமாகத்தான் செய்வது சர்வவல்லமையுள்ள தேவனின் தெய்வச் செயலாக (providence) இருக்கிறது என்றும், இதுவே அவருடைய திட்டம் என்றும் அவர்கள் அறிந்து கொள்ளும்படி செய்யவே நாம் வந்திருக்கிறோம். இது முடிவல்ல. இது புது வாழ்வின் தொடக்கம். 18அதன்பிறகு, தம்முடைய வார்த்தையில், இந்தக் காரியங்களைக் குறித்து தேவனால் போதிக்கப்பட்டிருக்கிற நாம், நம்முடைய வெளிப்படுத்தலை கொடுக்கும்படியாக வந்திருக்கிறோம். இந்தப் பிற்பகலில், இந்த காரியத்தை முடிக்க நான் எவ்வளவாய் சந்தோஷப்படுகிறேன், தேவனுடைய வார்த்தையைக் குறித்து அதே காரியத்தையே நாம் எல்லாரும் வெளிப்படுத்த முடியும், ஏனென்றால் இவர்கள் அதை நிறைவேற்றி விட்டார்கள். சகோதரி பெல் அவர்கள், இங்கே இக்கூடாரத்தில் ஒரு அன்புமிக்க, கிறிஸ்தவ பரிசுத்தவாட்டியாக இருந்தார்கள் என்பதை நாம் அறிந்திருக்கையில், அவர்களும் கூட தம்முடைய வெளிப்படுத்தல்களைச் செய்தார்கள். அவர்கள் தேவனைக் குறித்து அவர்களுடைய உணர்ச்சியை அறியும்படி செய்தார்கள். இந்த இறப்பு செய்தியை செய்தித்தாளில் வாசித்ததை நான் சற்று முன்பு கேட்டபோது, சகோதரன் ஜிம் இவர்களைத் திருமணம் செய்வதற்கு முன்பு என்று நினைக்கிறேன், அப்போது கூட அவர்கள் டென்னஸியில், தம்முடைய தீர்மானத்தைச் செய்தார்கள். அவர்கள் தம்முடைய வெளிப்படுத்தலைச் செய்தார்கள். எனவே, இவை சாட்சிகளாக உள்ளன. நான் அறிந்துள்ள வரைக்கும், அந்த நாள் முதற்கொண்டு, அந்த வெளிப்படுத்தலைச் செய்வதை அவர்கள் ஒருபோதும் நிறுத்தவேயில்லை. அவர்கள் ஒருக்கால், இன்றைக்கு, மேலே பரலோகத்தின் தாழ்வாரங்களில், அதோ அங்கு எங்கேயோ ஓரிடத்தில் நித்திய மகிமையின் மண்டலங்களில், தேவனுடைய வீதிகளில் நடந்து கொண்டே, அதை இன்னும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சாவுக்குரிய மண்டலத்தின் இந்த நிழல்களுக்கு அப்பால், அவர்கள் இன்னுமாக அதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 19நாம் சகோதரி பெல் அவர்களை அறிந்துள்ளபடி, அவர்கள் தங்கள் சாட்சியைக் குறித்து வெட்கப்பட்டதே கிடையாது. அவர்களுடைய சாட்சியைக் குறித்து அவர்கள் எந்தவிதத்திலும் ஒருமுறையும் வெட்கப்பட்டதேயில்லை. ஒரு தடவையாவது அவர்கள் எதையாகிலும் கூறுவதற்குத் தயங்கினதேயில்லை. அவர்கள் அதை வெளிப்படுத்தினார்கள், அவர்கள் வெட்கப்பட்டதேயில்லை. அவர்கள் அங்கே பின்னால் தங்கள் கரங்களை மேலே உயர்த்தினவர்களாய் நின்று கொண்டு, அவர்களுடைய கன்னங்கள் வழியாக கண்ணீர் வழிந்தோடுவதை நான் எப்படியாய் பார்த்திருக்கிறேன். அவர்கள் இங்கே இந்தப் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு, இங்கே இதற்கு அப்பாலுள்ள ஒரு தேசத்தைக் குறித்த பாடல்களைப் பாடுவதையும், அது முழு சபையையும் கூச்சலிடச் செய்வதையும் நான் கண்டிருக்கிறேன். அவர்கள் வெட்கப்படவேயில்லை. அவர்கள் எல்லாவிடங்களிலும் தங்கள் வெளிப்படுத்துதலைக் கொடுத்தார்கள். அண்டை வீட்டார் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு சபைக்கும், அவர்கள் இணைந்திருந்த எல்லாவிடங்களிலும், அவர்கள் தங்களை அறியப்பண்ணி, தேவனைக் குறித்த அவர்கள் சிந்தனை என்னவென்பதை வெளிப்படுத்தினார்கள். அவர்களுடைய ஜீவியத்தைக் கொண்டும், அவர்களால் கூடுமான எல்லாவற்றைக் கொண்டும், அவர்கள் கிறிஸ்து இயேசுவில் ஒரு புதிதாகப் பிறந்த சிருஷ்டியாக எப்படி இருந்தார்கள் என்பதை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஒரு சில வாரங்களுக்கு முன்பு, அதே படிகளில் ஏறிச் சென்ற எனது அன்புக்குரிய வயது சென்ற தாய்க்கு அவர்கள் ஒரு அன்பான சிநேகிதியாக இருந்தார்கள். இன்றைக்கோ, அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். இந்த வெளிப்படுத்தல்களைக் காண்பதென்பது என்னவொரு அற்புதமான காரியமாக உள்ளது, தேவன் எப்படியாக அதைச் செய்கிறார். அவர்களுடைய, சகோதரி பெல் அவர்களுடைய கடிதங்கள்; நான் ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு வரும்போதும், சகோதரி பெல் அவர்களிடமிருந்து வந்திருக்கும் ஒரு கூட்டம் கடிதங்களையும், தொலைப்பேசி அழைப்புகளையும் என்னுடைய மகன் பில்லி தொடர்ந்து என்னிடம் கொண்டு வருவான். 'இதற்காக ஜெபியுங்கள். அதற்காக ஜெபியுங்கள்.' அது என்ன செய்து கொண்டிருந்தது? எனக்கு, அது அவர்களுடைய வெளிப்படுத்துதலாக இருக்கிறது, அவர்களுக்கு உள்ளே என்ன இருந்தது என்பதை அவர்கள் அறியச் செய்து கொண்டிருந்தார்கள்; அவர்களுடைய சக மனிதனுக்கான ஒரு பாரம், அவர்களுடைய பிள்ளைகளுக்கான ஒரு பாரம், அவர்களைச் சுற்றியிருந்த ஒவ்வொருவரையும் குறித்தும், வியாதிப்பட்டிருந்த ஒவ்வொருவரையும் குறித்தும் உள்ள ஒரு பாரம். 20கடந்த சில வருடங்களாக, சகோதரி பெல் அவர்கள் பெரும்பாலும் தேவனுடைய கிருபையினால் தான் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தேவனுடைய சுகமளிக்கிற வல்லமையில் உண்மையான விசுவாசியாக இருந்தார்கள். அன்றொரு இரவு அவ்விதமாக சம்பவித்தது... தேவன் அவர்களுக்கு சுகத்தைக் கொடுக்காமல், அந்த அன்புக்குரிய வயதான பரிசுத்தவாட்டியோடு என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் அவர்களுக்காக ஜெபித்ததேயில்லை, அவர்களுக்கு தேவன் சுகத்தைக் கொடுக்காமல் அவர்களோடு ஜெபித்ததேயில்லை. அன்றொரு இரவு, நான் தொலைபேசியில் அழைக்கப்பட்ட போது, நான் அப்பொழுது தான் அரிசோனாவிலிருந்து வந்திருந்தேன், அது ஏறக்குறைய நடு இரவு நேரமாக இருந்தது. அவர்கள் என் மகனை அழைத்து, 'சகோதரி பெல் அவர்களுடைய சிநேகிதியான சகோதரி ஷெப்பர்ட் அவர்களுக்காக நீங்கள் ஜெபிக்கும்படி விரும்புகிறோம்' என்றார்கள். அது சகோதரி ஷெப்பர்ட்- ஆக இருக்கும் என்று நான் நம்பினேன்; அது ஏதோவொரு சீமாட்டி, அவர்கள் ஒருக்கால் இப்பொழுது இக்கட்டிடத்தில் இருக்கலாம், ஷெப்பர்ட் என்ற பெயருடையவர்கள், இவர்களுக்கு அறிமுகமானவர்கள். அவர்கள் தான் மருத்துவமனையில் இருந்தார்கள் என்று நான் நினைத்தேன். அடுத்த நாள் காலையில், ஏறக்குறைய 11 மணிக்கு, அவர்கள் மீண்டும் அழைத்து, 'அது சகோதரி ஷெப்பர்ட் அல்ல. அது சகோதரி பெல் தாமே, அவர்கள் தான் மருத்துவமனையில் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அதைப் பார்க்கும் போது, அது ஞானமுள்ள தெய்வச் செயலாகவும் (providence), தேவனுடைய திட்டமாகவும் இருக்கிறது. அவன் அங்கே போய்ச் சேரக் கூடும் முன்பே, சகோதரி பெல் அவர்கள் தங்கப் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றிருந்தார்கள். நான் அங்கு போய் சென்று சேரக் கூடும் முன்பே, தேவன் ஆயிரவருட அரசாட்சிக்கான தம்முடைய மலர்ச்செண்டை உருவாக்கும்படியாக, தம்முடைய வண்ண ரோஜா மலரை பறித்து விட்டிருந்தார். நான் அங்கு போய்ச் சேரக் கூடும் முன்பே, அவர்கள் தேவனைச் சந்திக்கப் போய் விட்டார்கள். தேவன் தமது அன்பை வெளிப்படுத்துதல்! 21மகிழ்ச்சியான விவாகத்தோடு இந்த வருடங்கள் எல்லாம் அவர்கள் தங்களுடைய கணவருக்காகவும் தங்கள் பிள்ளைகளுக்காகவும் ஒரு வீட்டைக் கட்டி எழுப்பும்படியாக, ஒரு விசுவாசமுள்ள மனைவியாக ஒரு வெளிப்படுத்துதலாக இருந்தார்கள். சிறு பிள்ளைகள் மேஜையைச் சுற்றிலும் இருந்து, காரியங்கள் கடினமாகப் போன போது, அந்தக் கடினமான நேரங்களினூடாக அது தன்னைத்தானே வெளிப்படுத்தினது. பசியாயுள்ள சிறிய வாய்கள் மேஜையைச் சுற்றிலும் இருக்கும் போது, அவைகளுக்குப் போதுமானவற்றை - போதுமானவற்றைக் கொடுக்கும்படியாக, அந்தக் காரியங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்று அறிந்து கொள்வதற்கு ஒரு தாயார் தான் தேவை, அதற்கு ஒரு தாய் தான் தேவை. ஆனால், அவர்களுடைய கணவரோடும், அவர்களுடைய பிள்ளைகளோடும் அவர்கள் விசுவாசமுள்ளவர்களாய் நின்றார்கள், அது தான் உண்மையான விசுவாசத்தின் (loyalty) வெளிப்பாடாக இருந்தது. அதுவே உங்கள் ஒவ்வொருவருக்கும் முன்பாக இருக்கிறது. நான் அதைக் கூற வேண்டியதில்லை. அது சத்தியம் என்று உங்களுக்குத் தெரியும். பாருங்கள்? ஆம், ஐயா. 22அவர்கள் ஒருபோதும் தங்கள் பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ள தவறினதேயில்லை! அவர்கள் அந்தப் பிள்ளைகளுக்காக ஒரு விண்ணைப்பத்தையாவது கேட்காமல், நான் எப்போதாவது அவர்களைச் சந்தித்திருக்கிறேன் என்றோ, அல்லது அவர்களை விட்டுப் புறப்பட்டு வந்திருக்கிறேன் என்றோ நான் நம்பவில்லை. வாழ்க்கை என்பது வெறுமனே அவர்களுடைய பிள்ளைகளுக்கான ஒரு கனவாகவோ, அல்லது ஒரு ஆயத்தம்பண்ணும் ஸ்தலமாகவோ இருக்கிறது என்பதை அறிந்து வைத்திருந்த உண்மையான தாய்மையைத் தான் அது காண்பித்தது. இதற்கும் அப்பாலுள்ள ஒரு தேசத்தில் அவர்களை சந்திக்கவே இவர்கள் விரும்பினார்கள், அங்கே அதற்கு மேலும் கஷ்டமான நேரங்கள் இருக்காது. அவர்கள் தொடர்ந்து அதை என்னிடம் கூறி வந்தார்கள்... அவர்கள் என்னை சகோதரன் பில்லி என்று அழைத்தார்கள், அவர்கள், 'சகோதரன் பில்லி அவர்களே, என்னுடைய பிள்ளைகளுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள், அவர்கள் யாருமே இழக்கப்பட்டுப் போய் விடக் கூடாது' என்பார்கள். அது உண்மையான தாய்மையின் வெளிப்பாடாக இல்லாமல் இருக்குமா; தங்களுடைய பிள்ளைகளைக் குறித்தும், தங்கள் அண்டை வீட்டாரைக் குறித்தும், தங்கள் கணவரைக் குறித்தும், தங்கள் அன்பார்ந்தவர்களைக் குறித்தும் அக்கறை கொண்டுள்ள ஒரு தாய்! அது தேவன் இந்தப் பெண்மணிக்குள் இருந்து, நித்தியமான காரியங்களை வெளிப்படுத்துவதாகும். 23அவர்களுடைய கணவனுக்காக நான் எவ்வளவாய் பரிதபிக்கிறேன், அவர் என்னுடைய நல்நண்பர். ஜெர்மனியிலும் வெவ்வேறான இடங்களிலும் இருந்த அந்தப் பையன்களில் சிலர், ஒரு தாய் மரித்துப் போய் விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டபோது, அந்தப் பையன்களைக் குறித்து நான் எவ்வளவாய் பரிதாபப்படுகிறேன். ஆனால் பையன்களே, அவர்கள் ஒருக்கால் இங்கே உங்கள் மத்தியிலிருந்து போயிருக்கலாம், ஆனால் அவர்கள்-அவர்கள் மரிக்கவில்லை, - இல்லை. அவர்கள் என்றென்றுமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்று அவர்கள் ஜெபித்த ஸ்தலமாகிய ஒரு தேசத்திலே அவர்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏமாற்றமடையும்படி செய்து விடாதீர்கள். அவர்கள் ஏமாந்து விட மாட்டார்கள் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன். இந்தப் பிற்பகல் வேளையில், அந்த சக்கரத்தின் ஒரு குறுக்குக் கம்பி (spoke) வெளியே எடுக்கப்பட்டதை நான் காண்கிறேன். என்னுடைய குடும்பத்தின் முதலாவது குறுக்குக் கம்பி எடுக்கப்பட்டது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒருவர் பின் ஒருவராக, அவர்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவார்கள். அதற்கு அதிக காலம் பிடிக்காது. கவனியுங்கள். அந்தச் சக்கரம் வேறொரு தேசத்தில் மீண்டும் ஒன்றாக இணையலாம், அங்கே எந்த உடைந்து போன சக்கரங்களும் இருக்காது, அங்கே தேவனுடைய மகத்தான பொருளாதாரம் செய்து முடிக்கப்பட்டு, காலங்களினூடாக தொடர்ந்து உருண்டு கொண்டேயிருக்க முடியும். இக்குடும்பம் அவ்விதமே இருப்பதாக. நீங்கள் எப்போதுமே தாயை உடையவர்களாயிருந்தீர்கள்; இப்பொழுது என்றென்றுமாய் அவர்களோடு இருப்பீர்கள். அது உண்மை. 24வேறொரு காரியம் என்னவென்றால், தேவனுடைய அன்பு வெளிப்பட்டது தான். நான் அறிந்துள்ளபடி, அவர்கள் ஒருபோதும் வயது சென்றவர்களாய், வியாதியோடு மரிக்காமல் இழுத்துக் கொண்டே கிடந்து, வயதாகி, மரித்துப் போகாமல் மூட்டை கட்டிக் கொண்டு கிடக்கவோ, முடமாகி முடங்கிப் போவதோ, வியாதிப்பட்டு அங்குலம் அங்குலமாக மரிக்கவோ வேண்டாம் என்பதே அவர்களுடைய விண்ணப்பமாக இருந்தது. தேவன் அந்த விண்ணப்பத்தை அருளினார். அது உண்மை. ஏன், சரியாக இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளுக்கு முன்பு, அவர்கள் இங்கே சபையில் ஒரு இருக்கையின் பக்கத்தில் நின்று கொண்டே, கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தைப் பாடிக் கொண்டிருந்தார்கள். இது என்னவாக இருக்கிறது? ஒரு தாயாருடைய இந்தக் காரியம் என்னவாக இருக்கிறது, குறித்த காலத்திற்கு முன்பே, ஏறக்குறைய 65 வயதில் போவது போன்று காணப்படுகிறதா? அதற்கு என்ன அர்த்தம்? அது 'அவருக்கு முன்பாக உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்' என்ற காரியத்தில் தேவன் தம்மைத்தாமே வெளிப்படுத்துவதாகும். அவர் தேவன் என்றும், அவருடைய இருதயத்தின், அவருக்கு முன்பாக உத்தமமாய் நடக்கிறவர்களுடைய இருதயத்தின் வாஞ்சையை அவர் அருளிச் செய்வார் என்பதையும், அவர்களுடைய இதே மரணத்தின் மூலமாக தேவன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார், தேவன் நமக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் தேவன் என்றும், நாம் எல்லாருமே கட்டாயமாக இந்த இடத்திற்கு வந்தாக வேண்டும் என்றும் காண்கிறோம், அப்படியானால் அவருடைய வெளிப்படுத்தல்களின் அடையாளங்களை நாம் நோக்கிப் பார்ப்போமாக. அவருடைய அன்பும், அவருடைய சபையும், அவருடைய ஜனங்களும், இவ்வண்ணமாக இருக்கிற யாவுமே, எல்லாமே நமக்காகவுள்ள தேவனுடைய வெளிப்படுத்தல்களாக இருக்கின்றன. அப்படியானால், நாம் எல்லாரும் பணிவோடு நம்முடைய தலைகளை வணங்கி, கிறிஸ்து மூலமாக மரணத்தைக் கூட ஜெயித்த இந்த ஜீவனுக்காக தேவனுக்கு நன்றி கூற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிறகு, இயேசு யவீருடைய குமாரத்தியிடம் சென்ற போது, அவருடைய வார்த்தைகள், 'இவள் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள்' என்றிருந்தன. அவள் நித்திரை அடைந்தாள், அவள் மரிக்கவில்லை. அவள் ஒரு சிறு பெண் பிள்ளையாக, அநேக வருடங்களுக்கு முன்பே மரித்து விட்டாள், இப்பொழுதோ அவள் கிறிஸ்துவுக்குள் ஜீவித்துக் கொண்டிருக்கிறாள்; நமக்கு அது நித்திரை மட்டுமே, ஆனால் அவள் இயேசுவோடு விழித்து (எழும்பி) வருவாள். அப்படியானால் நாம் நம்முடைய தலைகளை வணங்கினவர்களாய், இந்தத் தீரமான ஜீவியத்திற்காக நன்றிகளைச் செலுத்துவோம். 25பரலோகப் பிதாவே, நீர் எங்கள் இருதயங்களை நிச்சயமாக அறிந்திருக்கிறீர், எங்கள் சிந்தையிலுள்ள நினைவுகளும் நிச்சயமாகவே உமக்குத் தெரியும். எங்களைக் குறித்த எல்லாவற்றையும் நீர் அறிந்திருக்கிறீர். நாங்கள் உமது கரத்தினால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். சகோதரி பெல் அவர்கள் எங்களை விட்டு எடுக்கப்பட்டுள்ளதைக் காண்பது எங்களுக்கு வருத்தமாயுள்ளது என்று உமக்குத் தெரியும். ஆனால், தேவனே, அவர்களுடைய விண்ணப்பம் அருளிச்செய்யப்பட்டது என்பதற்காகவும், அவர்களுக்கான உம்முடைய வாஞ்சை நிறைவேறி விட்டது என்பதற்காகவும் நாங்கள் நன்றியுணர்வோடு எங்கள் தலைகளையும் இருதயங்களையும் தாழ்த்துகிறோம். அது, இங்கே பாதையின் முடிவிலும் கூட, அவர்கள் உம்முடைய ஊழியக்காரியாக இருந்தார்கள் என்பதை அவர்கள் தொடர்பு கொண்ட (அவர்களுக்கு அறிமுகமான) ஒவ்வொருவருடைய ஜீவியத்திலும், அவர்களுடைய இரங்கல் செய்தி (obituary) எழுதப்பட்டு விட்டது. அவர்களை அறிந்திருக்கிற எல்லாருடைய இருதயங்களிலும் அவர்களுடைய செல்வாக்கு நீண்ட காலம் ஜீவிப்பதாக. தேவனே, இந்த வருடங்கள் எல்லாம், அவர்களுக்குப் பிரியமானதும், அவர்கள் பேசினதும், அவர்கள் பாடினதுமான அத்தேசத்தில் அவர்களுடைய தீரமான ஆத்துமாவை நீர் இளைப்பாறப் பண்ண வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். 26கர்த்தாவே, இந்தப் பிற்பகல் வேளையில், ஜிம்மி அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். அவர் அங்கே அமர்ந்திருக்கிறதை நான் பார்க்கும் போது, அவருடைய நினைவுகளை தம்முடைய கன்னங்கள் வழியாக பளிங்கு போன்று தெளிவாக, பாயும் கண்ணீராக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு விசுவாசமுள்ள மனைவியைக் குறித்து அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பிள்ளைகளும், தங்கள் கன்னங்கள் வழியாக கண்ணீர் பாய, ஒரு அன்பான தாயாரைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவனே, நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்களுடைய இருதயங்களை ஆறுதல்படுத்தும். மனிதனுடைய இருதயத்திற்குப் போகக் கூடிய வேறு ஏதுவும் அடைவதற்கும் அப்பாலுள்ள அந்த கரத்தை நீட்டி, ஏதோவொரு நாளில் நாங்கள் மீண்டும் சந்திப்போம் என்றும், அங்கே வேறொரு அடக்க ஆராதனையைக் கொண்டிருக்க மாட்டோம் என்ற இந்தப் பெரும் திருப்தியை அவர்களுக்குக் கொடும். 27அவர்களுடைய அன்பார்ந்தவர்களையும், அவர்களுடைய சகோதரர்களையும், அவர்களுடைய சகோதரிகளையும், அவர்களுடைய பேரப்பிள்ளைகளையும், அவர்களுடைய அண்டைவீட்டுக்காரர்களையும் ஆசீர்வதியும். கர்த்தாவே, இந்த சபையார் இவர்களை எவ்வளவாய் நேசித்தார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்கள் மத்தியில் நடந்தது போன்று, அவர்கள், அவர்கள் இவர்கள் மத்தியிலும் நடந்திருக்கிறார்கள். கர்த்தாவே, நாங்களும்—நாங்களும் அவர்களோடு ஒன்றாக இருந்து, நாங்கள் அவர்களை நேசித்தோம் என்ற இம்மகத்தான பரஸ்பரமான உணர்வை பகிர்ந்து கொள்கிறோம். அவர்களுடைய ஜீவியத்திற்காக எங்களுடைய-எங்களுடைய-எங்களுடைய நன்றியை உமக்கு வெளிப்படுத்தியவாறு நாங்கள் இங்கேயிருக்கிறோம். எங்களை உருக்கி வார்ப்பியும், கர்த்தாவே, எங்களை உருவாக்கும், நாங்களும் கூட, பாதையின் முடிவுக்கு வரும்போது, நாங்கள் உம்மைச் சந்திக்க ஆயத்தமாய் இருப்போமாக. ஓ நித்திய தேவனே, எங்களுடைய அநேக பாவங்களை மன்னியும். கர்த்தாவே, எங்கள் மேல் இருக்கமாயிரும், நாங்கள் பலவீனரும், சோர்வடைந்தவர்களாகவும் இருக்கிறோம். 28இந்தப் பிற்பகல் வேளையில், நீர் எங்களுக்கு ஆறுதலை தர வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். வெவ்வேறு ஊழியக்காரர்கள் மூலமாகவும், இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர நியமிக்கப்பட்டவர்கள் மூலமாகவும், அண்டை வீட்டுக்காரர்கள் மூமாகவும், நண்பர்கள் மூலமாகவும், உம்முடைய வார்த்தையிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட இந்த வார்த்தைகளிலிருந்து நாங்கள் அதைக் கண்டு கொள்வோமாக. பூக்கள், மரங்கள், சூரிய ஒளி, இலைகள் இவற்றின் சாட்சியைக் கொண்டும், மற்றும்-மற்றும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சி பகருகிற பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தைக் கொண்டும், நாங்கள் அதை அங்கே கண்டு கொள்வோமாக. 'நான் உங்களைத் திக்கற்றவர்களாய் விடேன். நான் பிதாவினிடத்தில் வேண்டிக் கொள்வேன், அப்பொழுது அவர் வேறொரு தேற்றரவாளனை உங்களுக்குக் கொடுப்பார், அவர் என்றென்றைக்கும் தங்கி வாசமாயிருப்பார்.' ஓ, கர்த்தாவே, நாங்கள் எவ்வளவாக அவரை நேசிக்கிறோம்! ஆபத்து நேரிடும் இந்த மணி நேரங்களில், இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையை எங்களுக்குக் கொடுக்கும்படியாக, நீர் அவரை எங்களுக்கு அனுப்புகிறதற்காக நாங்கள் எவ்வளவாய் உம்மைப் பாராட்டுகிறோம். இனிமேலும் ஆராதனைக்கு வரும்படியாக இப்பொழுது எங்களுக்கு பலத்தைத் தந்தருளும். 29கர்த்தாவே, இங்கே சீருடை அணிந்து கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்தப் பையன்களுக்காக ஒரு விசேஷமானதை இப்பொழுது கேட்க விரும்புகிறேன். இவர்கள் தங்கள் பதவிகளுக்கு திரும்பிப் போக வேண்டியதாய் இருக்கையில், இந்தப் பையன்களை ஆசீர்வதியும். ஆனால் கர்த்தாவே, நான் ஜெபிக்கிறேன், அந்நாளில்... அவர்கள் இப்பொழுது அணிந்து கொண்டிருக்கும் இந்தச் சீருடைகளை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் தாயாரின் ஜெபத்திற்குப் பதில் கிடைப்பதாக: இவர்கள் அந்நாளில் இயேசு கிறிஸ்துவினுடைய பரிசுத்தத்தையும் நீதியையும் வஸ்திரமாகத் தரித்துக் கொள்வார்களாக. கர்த்தாவே, சிறு பெண்களும், யாவரும் ஒன்றாக இருந்து, நாங்கள் எவ்வாறு இருக்க விரும்புகிறோமோ அவ்வாறு, கிறிஸ்தவ போர் வீரர்களாகவும் மிகவும் திடமான விசுவாசத்தைக் கொண்டவர்களாகவும் இருப்போமாக. கர்த்தாவே, நாங்கள் மீண்டும் சந்திக்கும் அந்த நாள் வரையில் எங்களுக்கு வழிகாட்டி, எங்களை நடத்தியருளும். இப்பொழுது இவர்களுடைய (சகோதரி பெல்லுடைய), ஜீவியத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், உமது பாதத்தண்டையில் நாங்கள் எல்லாரும் சந்திக்கும் மட்டுமாக எங்கள் யாவரோடும் நீர் இருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில், நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென்.